×

திருக்கழுக்குன்றத்தில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொது கூட்டம்

திருக்கழுக்குன்றம், ஜூன் 7: காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றியம் மற்றும் பேரூராட்சி திமுக சார்பில், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் திருக்கழுக்குன்றத்தில் நடந்தது. திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளர் வீ.தமிழ்மணி தலைமை தாங்கினார். திருக்கழுக்குன்றம் பேரூராட்சி செயலாளர் டி.யுவராஜ் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா, காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ, திருப்போரூர் எம்எல்ஏ எல்.இதயவர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட துணை செயலாளர் விஸ்வநாதன், பொதுக்குழு உறுப்பினர் தேவதாஸ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஞானபிரகாசம், மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் துரை மற்றும் நிர்வாகிகள் ஜெயராமன், ரமேஷ், பூபதி, தனசேகரன், செல்வராசன், சுரேஷ், செல்வகுமார், கோபால், விஜயன், குமார், சரவணன், செங்குட்டுவன்,   ஹரிதினேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜாகிர்உசேன் நன்றி கூறினார்.

Tags : meeting ,voters ,Thirukkulam District General ,
× RELATED மின்னணு வாக்கு பதிவு கருவி திருட்டு...