×

இதய சிகிச்சை தொடர்பாக சென்னையில் சர்வதேச கருத்தரங்கு

சென்னை: இதய சிகிச்சை தொடர்பாக 3 நாள் சர்வதேச கருத்தரங்கு ‘‘சென்டியன்ட் சம்மிட்’’ சென்னையில் இன்று நடக்கிறது. அப்போலோ மருத்துவமனையின் மூத்த இதய சிகிச்சை மருத்துவர் சாய் சதிஷ் இதய சிகிச்சை தொடர்பான 3 நாள் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதுதொடர்பாக மருத்துவர் சாய் சதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது: இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் டாக்டர்கள், இதய சிகிச்சை மருத்துவர்கள் ஒரே நோயாளிக்கு வெவ்வேறு விதமான சிகிச்சையை பரிந்துரைப்பார்கள். ஒரே நோயாளிக்கு ஒவ்வொரு டாக்டரும் ஒவ்வொரு விதமான சிகிச்சையை பரிந்துரைப்பார்கள். அதனால் இதயம் சார்ந்த சிகிச்சை மேற்கொள்ளும் அனைத்து டாக்டர்களையும் ஒருங்கிணைக்க ‘‘சென்டியன்ட் சம்மிட்’’ கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

உலகின் தலைசிறந்த 20 டாக்டர்களை மட்டும் இந்த கருத்தரங்கு, பயிற்சி  பட்டறைக்கு அழைக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் 400 டாக்டர்கள்  கருத்தரங்கில் பங்கேற்கிறார்கள். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த டாக்டர்கள் அந்தந்த நாடுகளின் தலைசிறந்த இதய சிகிச்சை டாக்டர்கள் ஆவர். கருத்தரங்கின் முதல்நாளில் உலகின் மிகக்கடினமான 50 இதய அறுவை சிகிச்சை, நுண்துளை அறுவை சிகிச்சை வீடியோக்களை பார்த்து டாக்டர்கள் அந்த சிகிச்சை தொடர்பாக விவாதிக்க உள்ளனர். கருத்தரங்கின் 2வது, 3வது நாட்களில் மருத்துவர்கள் தங்கள் மேற்கொண்ட அறுவை சிகிச்சை, நுண்துளை அறுவை சிகிச்சை தொடர்பான தகவல்களை பகிர்ந்துகொள்கின்றனர்.
மூத்த டாக்டர்கள், இளம் டாக்டர்கள் இடையேயான தகவல் பரிமாற்றம் மூலம் இனி வரும் காலங்களில் சிறப்பான சிகிச்சைக்கு பரிந்துரைக்க முடியும். சிறப்பான சிகிச்சை வழங்க முடியும். இவ்வாறு கூறினார்.         

Tags : International Seminar ,Chennai ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...