×

சூட்டிங் மட்டம் பகுதியில் புல்வெளி பூங்கா அமைக்க தடை

ஊட்டி,ஜூன்5: ஊட்டி அருகேயுள்ள சூட்டிங்மட்டம் (9வது மைல்) பகுதியில்  தோட்டக்கலை துறை சார்பில்ரூ.10கோடி செலவில் துவக்க இருந்த புல்வெளிப்பூங்கா அமைக்க சென்ைன உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
 நீலகிரி  மாவட்டம் ஊட்டி அருகே உள்ள கேர்ன்ஹகில்,அவலாஞ்சி,சூட்டிங்மட்டம்,  பைக்காரா நீர் வீழ்ச்சி மற்றும் அணை, தொட்டபெட்டா போன்ற பகுதிகள்  வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதிகளில் தற்போது  அங்குள்ள பழங்குடியின மக்களை கொண்டு சூழல் சுற்றுலா ஏற்படுத்தப்பட்டுள்ள  நிலையில், அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள  இயற்கை அழகையும் கண்டு ரசித்து செல்கின்றனர். இந்நிலையில், ஊட்டி அருகே 12  கி.மீ., தொலைவில் உள்ள சூட்டிங்மட்டம் பகுதி உள்ளது. 86 ஏக்கர் பரப்பளவில்  உள்ள இப்பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.


இதை தோட்டக்கலை துறையினர்  ரூ.10 கோடி செலவில் (இயற்கை பூங்கா) புல்வெளி பூங்கா அமைக்க திட்டமிட்டனர்.  இதற்கான பணிகளும் நடந்து வந்தன. ஊட்டியில் இருந்து கர்நாடகம் மற்றும்  கேரள மாநிலத்திற்கு செல்லும் பிரதான சாலையோரத்தில் இப்பூங்கா அமைக்க  திட்டமிடப்பட்டிருந்தது. இவ்விரு மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா  பயணிகள் அனைவரும் இங்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருந்தது. மேலும்  தோட்டக்கலை துறை மற்றும் தமிழக அரசுக்கு ஆண்டிற்கு பல கோடி வருவாய்  அதிகரிக்கவும் வாய்ப்பிருந்தது. இந்நிலையில், இப்பகுதியில் பூங்கா  அமைத்தால், இயற்கை அழகு பாதிக்கும், புல்வெளிகள் மற்றும் சோலை வனங்கள்  பாதிக்கும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ஒருவர் ெபாது நல வழக்கு  தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சூட்டிங்மட்டம்  பகுதியில் இயற்கை பூங்கா அமைப்பதற்கு தற்காலிக தடை விதித்துள்ளனர்.

Tags : lawn park ,cottage ,
× RELATED திருவிக நகர் தொகுதியில் மக்கள்...