×

கூடலூர்,பெங்கால்மட்டம், பிக்கட்டியில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

மஞ்சூர், ஜூன் 5:  பெங்கால்மட்டம், பிக்கட்டி பகுதிகளில் திமுக., முன்னாள் தலைவர் கருணாநிதியின் 96வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மஞ்சூர் அருகே உள்ள பெங்கால்மட்டத்தில் திமுக., முன்னாள் தலைவர் கருணாநிதியின் 96வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பாலகொலா ஊராட்சி செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். ஊராட்சி துணை செயலாளர் ராஜன், ஒன்றிய பிரதிநிதி சுப்ரமணி, ராஜ்குட்டி, ரவிகுமார், தருமன், பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவை முன்னிட்டு கொடியேற்றி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.  கிளை நிர்வாகிகள் பொன்னன், குமார், ராமச்சந்திரன், முத்துலிங்கன் குட்டி தினேஷ்குமார், நடராஜ், வடிவேல், செல்வரத்தினம், பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், மஞ்சூர் அருகே பிக்கட்டி பேரூராட்சி கழகத்தின் சார்பில் கருணாநிதியின் 96வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி செயலாளர் புத்திநடராஜ் தலைமை தாங்கினார். கிளை நிர்வாகிகள் சரவணன், கணேஷ், குட்டி, சந்திரன், ஒன்றிய மகளிரணி துணை செயலாளர் விஜயலட்சுமி, ரவிச்சந்திரன், ரங்கசாமி, பரமசிவன், ராஜன், கோவிந்தன், சிட்டு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு பிக்கட்டி பஜாரில் திமுக., கொடியேற்றப்பட்டு பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினர். இதேபோல் மைனலாமட்டத்திலும் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கூடலூர்:  கருணாநிதியின் 96வது பிறந்த நாள் விழா கூடலூரில் நகர துணை செயலாளர் ஜபருல்லா தலைமையில் மாவட்ட சிறுபான்மை அணி சார்பில் நடந்து. இதில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கராஜ், ஹனிஃபா,  அவைத்தலைவர் சந்தானம் ஆகியோர் இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ஜபருல்லா, மகளிர் அணி வெண்ணிலா, மீனவர் அணி புட்ராஜ், கிளைக் கழக செயலாளர்கள் செல்வராஜ், தில்சாதிக், பாபு, பாலகிருஷ்ணன், ஜோஸ், சிங்கப்பூர் கணேசன், மஜீத், ரங்கசாமி நாகேஷ், ஐசக், விஜயகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இலக்கிய அணி துணை அமைப்பாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

Tags : Karunanidhi ,birthday celebration ,
× RELATED இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன்...