கடலூரில் கராத்தே கருப்பு பட்டயம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

கடலூர், ஜூன் 5:   கடலூரில் கராத்தே கருப்பு பட்டயம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா இஷின்ரியூ கராத்தே பள்ளி சார்பாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போடி செட்டி தெரு வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கடலூர் அரிஸ்டோ, சரஸ்வதி வித்யாலயா, சி.கே. லட்சுமி சோர்டியா உள்ளிட்ட பள்ளி மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சிக்கு கின்னஸ் சாதனையாளர் சென்சாய் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் பாலசுப்பிரமணியம், கியோஷி செல்லபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் லட்சுமி சோர்டியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் மாவீர்மல் சோர்டியா, அரிஸ்டோ பப்ளிக் பள்ளி சேர்மன் சிவகுமார் ஆகியோர் கவுரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். விழாவில் தவளக்குப்பம் ஏ.ஜே. பள்ளி முதல்வர் ரங்கநாதன், கடலூர் துறைமுகம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளி முதல்வர் உதயகுமார் ஷியாம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வினோத்குமார் நன்றி கூறினார். கடலூர் அரிஸ்டோ, சரஸ்வதி வித்யாலயா, லட்சுமி சோர்டியா உள்ளிட்ட பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கருப்பு பட்டயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர்கள் ஹரிவர்ஷன் உள்ளிட்ட 100 பேர் பட்டயம் பெற்றனர். பெற்றோர்கள், ஆசியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Cuddalore ,
× RELATED அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்