×

சிதம்பரத்தில் இருந்து சி.முட்லூர் நீதிமன்றம் வரை அரசு பேருந்து இயக்க கோரிக்கை

சிதம்பரம், ஜூன் 5:  சிதம்பரத்தில் இருந்து சி.முட்லூர் நீதிமன்றம் வரை அரசு நகர பேருந்து கட் சர்வீசாக விட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சிதம்பரம் கச்சேரி தெருவில் இயங்கி வந்த ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் அனைத்தும் கடந்த 3ம் தேதி முதல் சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள புதிய நீதிமன்ற கட்டிடங்களில் இயங்கி வருகிறது. ஏற்கனவே சிதம்பரம் சி.முட்லூர் புறவழிச்சாலையில் அதிக பேருந்துகள் செல்லவில்லை. நீதிமன்றத்திற்கு மக்கள் எளிதாக சென்று வர அரசு பேருந்து கட் சர்வீஸ் விட வேண்டும். மேலும் நீதிமன்றத்தின் அருகே வணிகவரித்துறை அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் அரசு கலைக்கல்லூரி ஆகியவை இயங்கி வருகிறது. ஆகையால் சிதம்பரத்தில் இருந்து சி.முட்லூர் அல்லது பு.முட்லூர் வரை அரசு பேருந்துகள் இயக்க வேண்டும். மேலும் சி.முட்லூர் புறவழிச்சாலை வழியாக கடலூர், புதுவைக்கு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் நிலைகளை தூர் வாரவும், சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்நில் கருப்பூர், மாதிரி வேலூர் பகுதியில் தடுப்பணையை விரைந்து கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை சிதம்பரம் வர்த்தகர் சங்க தலைவர் சதீஷ்குமார் மற்றும் உறுப்பினர்கள் சப் கலெக்டர் விசுமகாஜனிடம் வழங்கினர்.

Tags : Chidambaram ,C Madlur Court ,
× RELATED மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ்...