×

கோபி, சத்தி உள்பட 4 நகராட்சிகளில் வரையறுக்கப்பட்ட வார்டு விவரம் வெளியீடு

ஈரோடு, ஜூன் 5:  ஈரோடு  மாவட்டத்தில் கோபி, சத்தி, பவானி, புஞ்சைபுளியம்பட்டி ஆகிய நான்கு  நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகளின் வரையறுக்கப்பட்ட வார்டுகளின்  விவரம் வெளியிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி துறை சார்பில் மாநகராட்சி,  நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வரையறுக்கப்பட்ட  வார்டுகளின் விபரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு  மாவட்டத்தில் பவானி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில், வார்டு  15 எஸ்சி.,பிரிவினருக்கும் (பொது), வார்டு 6 எஸ்சி.,பிரிவு (பெண்), வார்டு  எண் 7,13,14,16,17,18,19,20,21,23,24,25,26 ஆகிய பெண்கள் வார்டாகவும்,  மற்றவை பொது வார்டாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோபி நகராட்சியில் மொத்தம்  30 வார்டுகள் உள்ளன. இதில், வார்டு 26 எஸ்சி.,வகுப்பு (பொது), வார்டு 4,30  எஸ்சி.,வகுப்பு (பெண்), வார்டு 2,3,6,7,12,13,17,18,20,21,23,28,29 ஆகிய  பெண்கள் வார்டாகவும், மற்றவை பொது வார்டாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புஞ்சைபுளியம்பட்டி  நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில், வார்டு 12,17  எஸ்சி.,வகுப்பு (பொது), வார்டு 3,13 எஸ்சி.,வகுப்பு (பெண்), வார்டு  2,4,6,7,14,16,18 ஆகிய பெண்கள் வார்டாகவும், மற்றவை பொது வார்டாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள்  உள்ளன. இதில், வார்டு 17 எஸ்சி.,வகுப்பு (பொது), வார்டு 1,25  எஸ்சி.,வகுப்பு (பெண்), வார்டு 6,7,8,9,12,13,15,16,19,20,21,24 ஆகிய  பெண்கள் வார்டாகவும், மற்றவை பொது வார்டாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல்,  அம்மாபேட்டை, அந்தியூர், ஆப்பகூடல், அரச்சலூர், அத்தாணி,  அரியப்பம்பாளையம்,அவல்பூந்துறை பவானிசாகர், சின்னசமுத்திரம், சென்னிமலை,  சித்தோடு, எலத்தூர், ஜம்பை, கொளப்பலூர்,  கொல்லாங்கோவில், கூகலூர், லக்கம்பட்டி, மொடக்குறிச்சி, நல்லாம்பட்டி,  நம்பியூர், நசியனூர், நெரிஞ்சிபேட்டை, ஒலகடம், பி.மேட்டுபாளையம்,  பள்ளபாளையம், பாசூர், பெரியகொடிவேரி, பெருந்துறை, பெத்தாம்பாளையம்,  சலங்கபாளையம், சிவகிரி, ஊஞ்சலூர், வடுகப்பட்டி, வாணிப்புதூர்,  வெள்ளோட்டம்பரப்பு,  வெங்கம்பூர் உட்பட ஆகிய 42 டவுன் பஞ்சாயத்துகளின்  வார்டுகளும் மறுவரை செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு  உள்ளாட்சித்துறை அறிவிக்கையில் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Tags : municipalities ,Kobi ,
× RELATED பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு பேரூராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு