×

மணல் திருட்டு லாரி பறிமுதல்

தொண்டி, ஜூன் 5: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள நத்தகோட்டை பகுதியில் தொண்டி போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் காமாட்சி நாதன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை போலீசார் சோதனை செய்ய நிறுத்தியபோது, ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரணை செய்ததில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் லாரி என்பதும், லாரியை சதீஷ் குமார் ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றன.

Tags : Sandy ,
× RELATED அம்மன் கோயிலில் நகைகள் கொள்ளை