×

தேனியில் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்

தேனி, ஜூன் 5: தேனியில் ஜாக்டோ, ஜியோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக, ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாலட்ட செயலாளர் முகமது அலி ஜின்னா தலைமை வகித்தார். ஓய்வு பெற்றோர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஆண்டவர் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ஞானதிருப்பதி சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின்போது, ஓய்வு பெறும்நாளில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியத்தை சஸ்பெண்டு செய்ததை கண்டித்து கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில், ஊரக வளர்ச்சி ஓய்வு பெற்ற சங்க செயலாளர் கனகராஜ், அனைத்துத் துறை அரசு ஓய்வூதியர்கள் சங்க மநில பொதுச் செயலாளர் ராமமூர்த்தி, உடையாளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட இணை செயலாளர் ஜானகி நன்றி கூறினார்.

Tags : demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்