ஓய்வு அரசு அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் பெரியகுளத்தில் நடந்தது

பெரியகுளம், ஜூன் 5: பெரியகுளம் வட்ட ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. சங்க கட்டிடத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் நல்லாசிரியர் வைகுண்டம் தலைமை வகித்தார். முன்னாள் செயலாளர் சுப்பையா முன்னிலை வகித்தார். இணைச்செயலாளர் பழனி ராஜாராம் அனைவரையும் வரவேற்று பேசினார். பொருளாளர் தேசிய நல்லாசிரியர் முருகேசன் நிதிநிலை அறிக்கையினை சமர்ப்பித்தார். விழாவில், கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்ற மருத்துவ கரத்தரங்கில் கலந்து கொண்ட மருத்துவர் செல்வராஜூக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், பாரத பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றதற்கு பாராட்டு தெரிவித்தும், தமிழக அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தியதற்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மனவளக்கலை மன்ற தலைவர் கௌதமன், சங்க துணைத்தலைவர் கோபால், நல்லாசிரியர் கொண்டல்துரை, சங்கரநாராயணன், சின்னப்பன், ஷண்முகவேல், மனோகரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சங்க துணைத் தலைவர் சங்கிலி நன்றி கூறினார்.

Tags : resignation ,Government ,Periyakulam ,Officers' Association Executive Meeting ,
× RELATED பெரியகுளம் அரசு மருத்துவமனையில் டெங்கு பாதித்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை