×

தேனி மாவட்டத்தில் 32 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி வகுப்புகள் துவக்கம்

தேனி, ஜூன் 5: தேனி மாவட்டத்தில் 32 அங்கன்வாடி மையங்களில் மழலையருக்கான முன்பருவ விளையாட்டுக்கல்வி வகுப்புகள் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு எல்,கே.ஜி, யுகேஜி எனப்படும் முன்பருவக் கல்வி முறை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தமிழக கல்வித் துறை அறிவித்தது. இதன்படி, அரசு பள்ளிகளில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் 32 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யுகேஜி என முன்பருவக் கல்வி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இதில் எல்.கே.ஜியில் 257 பேரும், யுகேஜி வகுப்பில் 210 பேருமாக மொத்தம் 467 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tags : classes ,LKG ,centers ,Theni district ,
× RELATED பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனின் இன்றைய சொத்து மதிப்பு பூஜ்யம்