மதநல்லிணக்க இப்தார் நோன்பு

சிங்கம்புணரி, ஜூன் 5:  சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் கரிசல்பட்டி  ஜூம்ஆ பள்ளிவாசலில் மதநல்லிணக்க இப்தார் நோன்பு விருந்து நடைபெற்றது. இதில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு கரிசல்பட்டி ஜமாத் தலைவர் காதர்ஷா தலைமை வகித்தார். கரிசல்பட்டி எஸ்.டி.பி.ஐ தொகுதி செயலாளர் அப்துல் ரசீது மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக கரிசல்பட்டி சித்தன்ன சுவாமி கோவில் பூசாரி வெள்ளத்துரை, சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ரமணி, கரிசல்பட்டி திமுக கிளை செயலாளர் ஷாஜகான், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட வழக்கறிஞர் அணி ராமச்சந்திரன், எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் அன்வர்தீன், உபைசுல்,  வஹாப் ஆகியோர் கலந்து கொண்டனர். கரிசல்பட்டி  முன்னாள் மாணவர்கள், ஜமாத்தார்கள், தோழமை கட்சி நிர்வாகிகள் மற்றும் கரிசல்பட்டி, தேனம்பட்டி, தேத்தாம்பட்டி, இரணிபட்டி சமுதாய மக்கள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED நாளை கார்த்திகை விரதம் தொடக்கம்: துளசி...