×

காரைக்குடியில் மரம் வளர்த்தால் பரிசு அசத்தும் அரசு பள்ளி

காரைக்குடி, ஜூன் 5: காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளியில் சுற்றுச்சூழலை காக்க வேண்டும் என்ற மனநிலை மாணவர்கள் மத்தியில் கொண்டும் வரும் முயற்சியாக மரம் வளர்ப்பவர்களுக்கு பரிசு வழங்கி அசத்தி வருகிறது.
காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். சாதரணமாக அரசு பள்ளிகளை மக்கள் புறக்கணித்து தனியார் பள்ளிகளை நாடி செல்லும் நிலையில்  பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டு ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்களை விட ஒரு படி மேலே சென்று அசத்தி வருகின்றனர். இந்த ஆண்டு அட்மிஷன் இல்லை என கூறும் அளவில் இப்பள்ளியின் செயல்பாடு உள்ளது. தனியார் பள்ளி மோகத்தில் மக்கள் இருக்கும் நிலையில் ஒரு அரசு பள்ளியில் சேர்க்கைக்கு எம்.பி, எம்எல்ஏ, சிபாரிசு கடிதத்துடன் வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மாணவர்களின் தனித்திறமைகளை வளர்க்க பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், விடுமுறையிலும் மாணவர்களிடம் சுற்றுச்சூழல் ஆர்வத்தை துண்டும் விதமாக செடி மற்றும் மரக்கன்றுகளை வளர்ப்பவர்களுக்கு பரிசு திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியது. பள்ளி திறந்த முதல்நாளில் மாணவர்கள் தாங்கள் வளர்த்த செடிகளுடன் வந்தனர். இதில் சிறப்பாக வளர்த்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் பீட்டர்ராஜா கூறுகையில், ‘‘இப் பள்ளியில் மிகவும் அடித்தட்டு மக்களின் குழந்தைகள் அதிகளவில் படிக்கின்றனர். மாணவர்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு வித்தியாசமாக மரக்கன்றுகள் வளர்ப்பு திட்டத்தை அறிவித்து அதனை செயல்படுத்தியுள்ளோம். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதன்மூலம் மாணவர்களிடையே மரக்கன்று வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளோம் என்றார்.

Tags : Karaikudi ,
× RELATED உடல் பருமன் குறைய சிறுதானியங்கள் சாப்பிடுங்க