மகளிர் விடுதிகளை பதிவு செய்ய உத்தரவு

சிவகங்கை, ஜூன் 5: சிவகங்கை மாவட்டத்தில் மகளிர் விடுதிகள் நடத்துபவர்கள் கட்டாயம்  பதிவு செய்ய கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: சமூக நலத்துறையில் தமிழ்நாடு  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும்  இல்லங்கள் (நெறிமுறைப்படுத்தும்) சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015ன் கீழ்,  மாவட்ட சமூக நலத்துறையில் பதிவு செய்ய வேண்டும். உரிய பதிவுச்சான்று  பெற்ற மகளிர் விடுதிகள் மட்டுமே தொடர்ந்து செயல்பட முடியும். மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பல மகளிர் விடுதிகள் பதிவு செய்யாமல்  அரசின் அனுமதி இல்லாமலேயே இயங்குவது தெரிய வந்துள்ளது. இத்தகைய விடுதிகளை வருகிற  15.6.2019க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில்  அனுமதி பெறாத மகளிர் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

× RELATED 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும்...