×

நான் வந்த வேலையை முடிந்தது மகிழ்ச்சி கலெக்டர் நாகராஜ் தகவல்

மதுரை, ஜூன் 5: ‘நான் வந்த வேலை முடிந்த மன மகிழ்ச்சியுடன் செல்கிறேன்’ என கூறி கலெக்டர் நாகராஜ் விடைபெற்றார். மாறுதல் உத்தரவு வந்த ஒரு மணி நேரத்தில் தனது பொறுப்புகளை ஒப்படைத்து சென்றார். மதுரை மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடந்த ஏப்.20ல் பெண் தாசில்தார் அத்துமீறி நுழைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தாசில்தார் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அப்போது மதுரை கலெக்டர் நடராஜன் இடமாற்றம் செய்யப்பட்டார். சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் நாகராஜன், மதுரை கலெக்டராக நியமிக்கப்பட்டார். இவர் ஏப்.28ம் தேதி பொறுப்பேற்று கொண்டார். மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்தது. பின்பு கலெக்டராக தொடர்ந்து பணியில் இருந்தார்.

தேர்தல் பணிக்கு பின்பு தன்னை எப்போது வேண்டுமானாலும் இடமாற்றம் செய்யலாம் என கலெக்டர் நாகராஜன் எதிர்பார்த்து காத்திருந்தார்.அவர் மதுரை கலெக்டராக பொறுப்பு ஏற்றது முதல் 39 நாட்களாக பணியில் நீட்டித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் யாரும் எதிர்பார்க்காத வகையில், அங்கன்வாடியில் காலியாக உள்ள 1,573 பணியிடத்துக்கு தகுதியான ஆட்களை நியமனம் செய்து. அவர்களுக்கான உத்தரவை கலெக்டர் வழங்கினார். அந்த உத்தரவு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை உரிய நபர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. பணி நியமிக்கப்பட்ட அனைவரும் உடனே பொறுப்பு ஏற்க அந்த உத்தரவில் கலெக்டர் தெரிவித்திருந்தார். அனைவரும் நேற்று பொறுப்பு ஏற்றனர்.

இந்நிலையில், அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சிபாரிசை மீறி, அங்கன்வாடி ஊழியர்களை கலெக்டர் நியமித்தது ஆளுங்கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கலெக்டரை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால், கலெக்டர் நாகராஜனை பணி மாறுதல் செய்து, தொழில் மேம்பாட்டு கழக இயக்குநராக நியமித்து நேற்று அரசு உத்தரவிட்டது. உத்தரவு மதியம் 1 மணிக்கு கலெக்டருக்கு கிடைத்தது. உடனே மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சாந்தகுமாரை அழைத்து, சுமார் 1.45 மணிக்கு அவரிடம் தனது பொறுப்புகளை கலெக்டர் நாகராஜன் ஒப்படைத்தார். மதியம் 2.15 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் அனைவரும் நன்றி தெரிவித்து விடைபெற்று சென்
றார். அப்போது அவர் கூறுகையில், ‘நான் வந்த வேலையை முடித்துவிட்டேன். மன மகிழ்ச்சியுடன் செல்கிறேன்’ என்றார். வேறு எந்த பதிலும் கூற மறுத்துவிட்டார்.

Tags : Nagaraj ,
× RELATED சூதாடிய 3 பேர் கைது