×

மாநில நீச்சல் போட்டியில் சாதனை மதுரை வீரர், வீராங்கனை தேசிய போட்டிக்கு தகுதி

மதுரை, ஜூன் 5: மாநில நீச்சல் போட்டியில் மதுரை வீரர், வீராங்கனைகள் நடத்திய சாதனையால் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றனர். தமிழ்நாடு நீச்சல் சங்கம் சார்பில் மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் நடந்தது. இதில் மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மதுரையில் இருந்து மட்டும் 25 பேர் பங்கேற்றனர். குரூப்1 பிரிவு 50மீ., ப்ரீஸ்டைலில் வீரர் விக்காஸ் இலக்கு தூரத்தை 24.89 வினாடிகளில் அடைந்து, தங்கப்பதக்கம் வென்றதுடன், 100மீ., போட்டியில் (54.91) வெள்ளிப்பதக்கமும், 200மீ., போட்டியில் (2.02.27வினாடி) வெண்கலம் மற்றும் 100மீ., பட்டர்பளேயில் (57.32வினாடி) வெண்கலப்பதக்கம் வென்றார். இதன் மூலம் 4பதக்கங்களை அவர் பெற்றார். குரூப்2 பிரிவில் வீராங்கனை முகிலவாணிக்கா, பேக்ஸ்டோக்கில் வெள்ளிப்பதக்கம் (35.12) வென்றார். 100மீ அதே பிரிவில் (1.19வினாடி) வெண்கலம் வென்றார்.

குரூப்3 பிரிவில் 200மீ., ஐஎம் போட்டியில் 200மீ., தூரத்தை 2.53.98 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார். 100மீ., பட்டர்பிளே போட்டியில் தங்கப்பதக்கம் (1.17.77வினாடி), ப்ரீஸ்டைல் வெண்கலப்பதக்கம் (2.30வினாடி) வென்றார். இதன் மூலம் மூவரும் இந்த மாதம் 26ல் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடக்கும் தேசிய நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இப்போட்டியில் முதலிடம் பெற்றால் பெங்களூருவில் நடைபெறும் ஆசிய நீச்சல் போட்டிக்கு தகுதி பெறுவர். சாதனை படைத்த வீரர்களுக்கு தமிழ்நாடு நீச்சல் சங்க துணைத்தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் மாலதி, மதுரை மாவட்ட நீச்சல்சங்க செயலாளர் கண்ணன் ஆகியோர் பாராட்டினர். மதுரை மாவட்ட பயிற்சியாளர் பாஸ்கர் உடன் இருந்தார்.

Tags : player ,Madurai ,state swimming competition ,
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...