×

14 ஊராட்சி ஒன்றியங்களில் பெண்களுக்கு 118 வார்டுகள் ஒதுக்கீடு ஆண்களுக்கு 112 ஒதுக்கீடு

திண்டுக்கல், ஜூன் 5: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் வார்டுகளுக்கான இட ஒதுக்கீடு விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகளை ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி, நிலக்காேட்டை, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், குஜிலியம்பாறை, ரெட்டியார் சத்திரம், சாணார்பட்டி, வடமதுரை, கொடைக்கானல், தொப்பம்பட்டி, வத்தலக்குண்டு, நத்தம் ஆகிய 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வார்டுகள் ஒதுக்கீடு விபரம் வருமாறு:

திண்டுக்கல்  ஊராட்சி  ஒன்றியத்தில் 1, 7, 15 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பெண் பிரிவுக்கும், 2, 12 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பொது  பிரிவுக்கும், 3, 8, 10, 13, 16, 17, 18  ஆகிய வார்டுகள் பொது பெண்கள் பிரிவுக்கும், 4, 5, 6, 9, 11, 14, 19 ஆகிய வார்டுகள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 13, 14 ஆகிய வார்டுகள்  தாழ்த்தப்பட்டோர் பெண் பிரிவுக்கும், 3, 9 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவுக்கும், 1, 2, 5, 6, 7, 16, 17 ஆகிய வார்டுகள் பொது பெண் பிரிவுக்கும், 4, 8, 10, 11, 12, 15 ஆகிய வார்டுகள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வத்தலக்குண்டு  ஊராட்சி ஒன்றியத்தில் 2, 5 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பெண் பிரிவுக்கும், 6வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவுக்கும், 1, 3, 4, 8 ஆகிய வார்டுகள் பொது பெண்கள் பிரிவுக்கும், 7, 9, 10, 11, 12 ஆகிய வார்டுகள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் 1, 11 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பெண் பிரிவுக்கும், 9வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவுக்கும், 3, 4, 5, 12, 13 ஆகிய வார்டுகள் பொது பெண் பிரிவுக்கும், 2, 6, 7, 8, 10 ஆகிய வார்டுகள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
கொடைக்கானல்  ஊராட்சி ஒன்றியத்தில் 1வது வார்டு  தாழ்த்தப்பட்டோர் பெண் பிரிவுக்கும், 11வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவுக்கும், 2, 4, 5, 6, 7 ஆகிய வார்டுகள் பொது பெண்கள் பிரிவுக்கும், 3, 8, 9, 10, 12 ஆகிய வார்டுகள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. நத்தம்  ஊராட்சி ஒன்றியத்தில் 10வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பெண் பிரிவுக்கும், 8வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவுக்கும், 1, 4, 5, 9, 11, 12, 13, 15, 19 ஆகிய வார்டுகள் பொதுபெண் பிரிவுக்கும், 2, 3, 6, 7, 14, 16, 17, 18, 20 ஆகிய வார்டுகள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒட்டன்சத்திரம்   ஊராட்சி ஒன்றியத்தில் 5, 12 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பெண்  பிரிவுக்கும், 7, 10 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவுக்கும்,  2, 3, 4, 9, 16, 17, 18, 19 ஆகிய வார்டுகள் பொது பெண் பிரிவுக்கும், 1, 6,  8, 11, 13, 14, 15, 20 ஆகிய வார்டுகள் பொது பிரிவினருக்கும்  ஒதுக்கப்பட்டுள்ளன. ரெட்டியசார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 5, 6 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பெண் பிரிவுக்கும், 12வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவுக்கும், 3, 4, 7, 8, 10, 16, 18 ஆகிய வார்டுகள் பொது பெண்கள் பிரிவுக்கும், 1, 2, 9, 11, 12, 14, 15, 17 ஆகிய வார்டுகள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 1, 12 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பெண் பிரிவுக்கும், 6, 12 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவுக்கும், 2, 3, 4, 5, 8, 9, 10, 11 ஆகிய வார்டுகள் பொது பெண் பிரிவுக்கும், 7, 14, 15, 16, 17, 18, 19 ஆகிய வார்டுகள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 10, 16 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பெண் பிரிவுக்கும், 2, 18 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர்  பொது பிரிவினருக்கும், 1, 3, 4, 5, 12, 15, 17, 20  ஆகிய வார்டுகள் பொது பெண் பிரிவுக்கும், 6, 7, 8, 9, 11, 13, 14, 19  ஆகிய வார்டுகள் பொது பிரிவினருக்கும்  ஒதுக்கப்பட்டுள்ளது.

வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 10வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பெண் பிரிவினருக்கும், 1வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவுக்கும், 2, 3, 4, 8, 11, 13, 15 ஆகிய வார்டுகள் பொது பெண் பிரிவுக்கும், 5, 6, 7, 9, 12, 14 ஆகிய வார்டுகள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் 10வது தாழ்த்தப்பட்டோர் பெண் பிரிவுக்கும், 8வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவுக்கும், 2, 4, 5, 9, 12 ஆகிய வார்டுகள்  பொது பெண்கள் பிரிவுக்கும், 1, 3, 6, 7, 11 ஆகிய வார்டுகள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags : women ,males ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது