×

பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு

பழநி, ஜூன் 5: பள்ளிகளில் 12 மணி நேரத்திற்கு மேல் வகுப்புகள் நடத்தப்படுவதற்கு கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் காலங்காலமாக நடத்தப்பட்டு வருகிறது. தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இச்செயல் முழுவீச்சில் நடைபெறுகிறது. பழநியில் உள்ள சில தனியார் பள்ளிகளில் மாணவர்கள் வகுப்பிற்கு காலை 7 மணிக்கு சென்று விட்டு மாலை 7 மணிக்கு வீடு திரும்பும் நிலை நிலவுகிறது. தவிர, குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட அரசு விடுமுறை தினங்களிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற இதுபோன்ற நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது என பள்ளி நிர்வாகம் பெற்றோர்களை மூளைச்சலவை செய்து விடுகிறது.

இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தியிடம் கேட்டபோது, விடுமுறை நாட்களில் வகுப்புகள் இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் வாய்மொழி மூலமாகவே தெரிவிக்கின்றனர். பள்ளிக்கல்வித்துறை  தடை விதித்தாலும் இச்சம்பவம் தொடர்ந்து நடந்தபடியே உள்ளது. பல அரசு அதிகாரிகளின் குழந்தைகள் தனியார் பள்ளியிலேயே படிக்கின்றனர். இதனால் இப்பிரச்சனை தொடர்பாக வாய் மூடியே உள்ளனர். பள்ளி வேலை நேரம் குறித்த வரையறை பெரும்பாலான பள்ளிகளில் கடைபிடிக்கப்படுவதில்லை. பள்ளிக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களுக்கு 12 மணி நேரத்திற்கு மேல் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பள்ளிகளின் மீது பள்ளிக் கல்வித்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : schools ,
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...