×

மாமனாரை குத்திய மருமகன் மீது வழக்கு

பெரியகுளம், ஜூன் 5: பெரியகுளம் அருகே பங்களாபட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சின்னபொன்னையா(55). அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு தனது மகள் நாகலட்சுமியை திருமணம் முடித்துக்கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக நாகலட்சுமி கணவருடன் கோபித்துக்கொண்டு தனது தந்தையின் வீட்டில் இருந்துள்ளார். தனது மனைவியை கூப்பிடுவதற்காக மாமனாரின் வீட்டிற்கு சென்ற ராமகிருஷ்ணன் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட மாமனாரை அசிங்கமாக பேசி கையால் அடித்தும், கத்தியால் குத்தியும் காயப்படுத்தியுள்ளார். காயமடைந்த சின்னபொன்னையா பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சின்னபொன்னையா கொடுத்த புகாரின் பேரில் பெரியகுளம் வடகரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : son-in-law ,
× RELATED இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தன்று...