×

பழநியில் டோப்பா தொழிற்சாலை அமைக்க கோரி வாலிபர்கள் டூவீலரில் பிரச்சாரம்.

பழநி, ஜூன் 5: பழநியில் டோப்பா தொழிற்சாலை அமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பைக் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பழநியில் டோப்பா தொழிற்சாலை அமைக்க வேண்டும். மத்திய அரசு பணிகளில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். பழநி கோயிலில் உள்ள காலிப்பணியிடங்களில் ஒப்பந்த பணியிடங்களை ரத்து செய்த நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் செயல்பாட்டை கொண்டு வர வேண்டும். கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். நகராட்சி ஆண்கள் பள்ளியில் விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும்.

சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பழநியில் பைக் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பிரச்சாரத்தில் மாநில தலைவர் ரெஜிஸ்குமார், மாவட்ட செயலாளர் பாலாஜி, மாவட்ட பொருளாளர் விஷ்ணுவர்தன், நகரத் தலைவர் பானுப்பிரியா, நகரச் செயலாளர் மாரிக்கண்ணு, நகர பொருளாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அடிவாரம் பாதவிநாயகர் கோயில் துவங்கிய பைக் பிரச்சாரம், மதனபுரம், இடும்பன் நகர், தட்டான்குளம், புதுநகர், சத்யா நகர் வழியாக பெரியார் திடலில் நிறைவடைந்தது. பிரச்சாரத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : dosa factory ,campaign ,
× RELATED திருவாரூர் அருகே கொரடாச்சேரியில்...