×

உவரி, அப்பர்குளத்தில் கலைஞர் பிறந்த நாள்

திசையன்விளை, ஜூன் 5: மறைந்த திமுக தலைவர் கலைஞரின் 96வது பிறந்த நாள் விழா, உவரியில் கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் விஎஸ்ஆர். ஜெகதீஸ் தலைமை வகித்தார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் பெல்சி முன்னிலை வகித்தார். உவரி ஊராட்சி செயலாளர் சேசையா வரவேற்றார். மதிமுக மாவட்ட அவைத்தலைவர் ரைமண்ட், கலைஞர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அந்தோணி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் தனபால், மீனவரணி துணை அமைப்பாளர் ஜோசப், அல்போன்ஸ், மகளிரணி விஜி, உறுமன்குளம் ஊராட்சி செயலாளர் அமெச்சியார், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் ஜெயசங்கர், சதீஷ், சுபாஷ், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். களக்காடு அருகே உள்ள அப்பர்குளத்தில், மறைந்த திமுக தலைவர் கலைஞரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. களக்காடு ஒன்றிய திமுக துணை செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமை வகித்தார். நடுக்குளம் செயலாளர் குருநாதன், சண்முகராஜ், மாணிக்கம் முன்னிலை வகித்தனர். விழாவில் திமுக கொடியேற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் செல்வ கருணாநிதி, இளைஞரணி துணை அமைப்பாளர் ஜின்னா, அருள்ஜோதி, வெள்ளத்துரை, கனகராஜ், மூக்காண்டி, ரகுபதி, கந்தையா, எம்.முருகன், ஆர்.முருகன், இசக்கிப்பாண்டி, சின்னத்துரை, மூக்காண்டி, கணேஷ் பெருமாள், பட்டுராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags : Uvari ,birthday ,artist ,
× RELATED நெல்லை நா.த.க. வேட்பாளர் மீது வழக்கு