×

புதுப்பட்டியில் மக்கள் தர்ணா

பாப்பாக்குடி, ஜூன் 5: பாப்பாக்குடி அருகே உள்ள புதுப்பட்டி, காசிநாதபுரம்  கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சிலர் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுவதால் ஏராளமானோர் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், காலிகுடங்களுடன் கிராம மக்கள், புதுப்பட்டி பஞ். அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தனர். இதையேற்று போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.

Tags : Dhanbad ,
× RELATED அனைத்து தொழிற்சங்கத்தினர் தர்ணா