×

தென்காசியில் இப்தார் நோன்பு திறப்பு

தென்காசி, ஜூன் 5: தென்காசியில் நகர திமுக சார்பில் ரமலான் பெருநாளை முன்னிட்டு மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. கொடி மரத்திடலில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் சாதிர் தலைமை வகித்தார். மாநில சிறுபான்மை பிரிவு ரசாக், மாவட்ட துணை செயலாளர் ஆயான்நடராஜன், பொருளாளர் சேக்தாவூது, மாணவரணி துணை செயலாளர் ஷெரீப், முன்னாள் கவுன்சிலர் நாகூர்மீரான், பீர்முகம்மது, சேக்முகம்மது முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய செயலாளர்கள் செல்லத்துரை, அன்பழகன், மாவட்ட நிர்வாகிகள் சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் வீராணம் சேக்முகம்மது, பகுத்தறிவு பேரவை வல்லம் திவான்ஒலி, மாரிமுத்து, மேலகரம் முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் ஜீவானந்தம், நகர நிர்வாகிகள் நடராஜன், அப்துல்கனி, பாலாசுப்பிரமணியன், சேக்பரீத், பாலாமணி, சுரேஷ், மோகன்ராஜ், ஐயப்பன், இசக்கித்துரை, சேக்அலி, ஜாகிர்உசேன், ராஜேந்திரன், காஜா, கோபால்ராம், சுலைமான், தேவதாஸ், மஜீத், காசர்பாய், கட்டியப்பா, செண்பகம், பொன்னானிசாகுல், செல்லப்பா, வேம்பு, ஐவேந்திரன் தினேஷ், காங்கிரஸ் நகர தலைவர் காதர்மைதீன், சுப்பிரமணியன், மாடசாமி, நாகூர்டெய்லர், ஆறுமுகம், சிபிஎம் பால்ராஜ், மாரியப்பன், குருசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி டேனிஅருள்சிங், சித்திக் சந்திரன், மதிமுக மாநில தொண்டர்படை பயிற்சியாளர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி பாபக்கி தங்கள் மதரசாவில் அதிமுக சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு 0.941   தென்காசி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஷமீம்இப்ராகிம் தலைமை வகித்தார்.   
அதிமுக நிர்வாகிகள் வெள்ளப்பாண்டி, முத்துக்குமாரசாமி, கட்டிக்காதர்,   சந்திரன், சுப்புராஜ், ராம்தாஸ், தர், சுலைமான், இந்திய யூனியன்   முஸ்லிம் லீக் முகம்மது அலி, காங்கிரஸ் சுப்பிரமணியன், அமமுக மாவட்ட   சிறுபான்மை பிரிவு ராஜாமுகம்மது, அப்பாஸ், செய்யது அலி, ஹைதர்அலி,   அப்துல்ஹமீது, சாகுல்ஹமீது மற்றும் பல்வேறு ஜமாஅத்தார்கள், சர்வ கட்சியினர்   உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை 0.941 தென்காசி கூட்டுறவு   பண்டகசாலை தலைவர் ஷமீம்இப்ராகிம் செய்திருந்தார்.

Tags : Tenkasi ,
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...