நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தின விழா

நாசரேத், ஜூன் 5: நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் உலகச் சுற்றுச்சூழல் தின விழா நடந்தது. தலைமை வகித்த நாசரேத்  தூய யோவான் பேராலய தலைமை குரு எட்வின் ஜெபராஜ், கல்லூரி  வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டினார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயராணி  பிரேம்குமார் வரவேற்றார். விழாவில் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் என திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லூரித் தாளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன், முதல்வர் ஜெயராணி மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

× RELATED நாசரேத்தில் பராமரிப்பின்றி காட்சி பொருளாக மாறிய அடிபம்பு