×

விழிப்புணர்வு சைக்கிள் போட்டி

நெல்லை, ஜூன் 5: உலக சைக்கிள் தினத்தையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் போட்டி நடந்தது. உலக சைக்கிள் தினத்தையொட்டி நெல்லை ரான்டோன்னரஸ், நெல்லை சைக்கிள் குழுவினர் சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மற்றும் போட்டியானது கேடிசி நகரில் இருந்து துவங்கி முக்கிய பகுதிகள் வழியாக நாங்குநேரி டோல்கேட் வரை சென்றது. பின்னர் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு பாளை கேடிசி நகரை வந்தடைந்தது. இவ்வாறு சுமார் 50 கி.மீ. தொலைவுக்கு நடத்தப்பட்ட இந்த சைக்கிள் போட்டியில் சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள், உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் நெல்லை, தூத்துக்குடியை சேர்ந்த அமிர்தராஜ், ஜோசப் கஸ்கரினோ, தீப்தி கஸ்கரினோ, போத்திலிங்கம், சிவகுருநாதா, ராஜ்குமார், மணிகண்டன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்றனர்.  இதில் முதலிடம் பெற்றவர்களுக்கு நெதர்லாண்டை சேர்ந்த ஜர்கன் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
இதுகுறித்து சைக்கிள் ஓட்டப்பந்தய வீரர்கள் கூறுகையில், ‘‘இதுபோன்ற போட்டிகளில் கலந்துகொள்வதற்காக பல்வேறு விலை உயர்ந்த சைக்கிள்களில் தினமும் பயிற்சி எடுத்துக்கொள்கிறோம். இந்த பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி எல்லா வகையிலும் நன்மை தரக்கூடியதாக உள்ளது. இப்போட்டியில் பெண்களும் பங்கேற்று  வெற்றி பெற்றுள்ளனர்’’ என்றார்.

Tags :
× RELATED புத்தன்தருவை கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சி நிதி வழங்கல்