×

எட்டயபுரம் அருகே கோயில் கும்பாபிஷேக விழா

எட்டயபுரம், ஜூன் 5: எட்டயபுரம் அருகே உள்ள த.சங்கரலிங்கபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில் புண்யாகவாஜனம். ரக்ஷாபந்தனம் வாஸ்து பூஜை, கோபூஜை, திக்பலி, பிரவேசபலி, கும்பபூஜைகள் நடந்தன. அன்றிரவு மாரியம்மன் யாகசாலைக்கு எழுந்தருளும் சயனவாசம், இயந்திர பிரதிஷ்டை, ரத்னஸ்தாபிதம் நடந்தது.  தொடர்ந்து வேதிகா அர்ச்சனை, நாடி சந்தானம், துர்காஹோமம், நவக்கிரகஹோமம், மந்திர புஷ்பம் தீபாராதனை நடந்தது. பின்னர் விமான கலச கும்பாபிஷேகம், மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை விழாக்கமிட்டியினர் மற்றும் கிராம பொதுமக்கள்  செய்திருந்தனர்.  

Tags : Temple Kumbabishek Festival ,Ettayapuram ,
× RELATED எட்டயபுரத்தில் சூதாடிய 4 பேர் கைது