புதுக்கோட்டை அருகே வீடுகளில் குடிநீர் உறிஞ்சிய மின்மோட்டார்கள் பறிமுதல்

புதுக்கோட்டை, ஜூன் 5: புதுக்கோட்டை அருகே வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு குழாய்களில் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சிய மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தூத்துக்குடி கலெக்டரின்சத்துணவு பிரிவு நேர்முக உதவியாளர் வீரராகவன் தலைமையில் அதிகாரிகள் புதுக்கோட்டை அடுத்த அல்லிக்குளம், ஆண்டாள்நகர் பகுதிகளில் திடீர் ஆய்வு நடத்தினர். புதுக்கோட்டை எஸ்.ஐ. அந்தோணிராஜ் மற்றும் போலீசார் உதவியுடன் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 5 வீடுகளில் உள்ள குடிநீர் உறிஞ்சிய மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. ஆய்வு பணியில் தூத்துக்குடி பிடிஓக்கள் வசந்தா, கருப்பசாமி, துணை பிடிஓக்கள்  செல்லபாண்டியன், பாலசுப்பிரமணியன், மாசானம், கல்யாணசுந்தரம் பங்கேற்றனர். பின்னர் பிடிஓ கருப்பசாமி கூறுகையில், ‘‘சட்டவிரோதமாக மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சியது கண்பிடிக்கப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்’’ என்றார்.

Tags : houses ,Pudukottai ,
× RELATED குடிநீர் வழங்காததால் ஆத்திரம்...