×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருமலை, ஜூன் 5: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். இந்தியா மட்டும் இன்றி வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். வார விடுமுறை, விசேஷ நாட்களில் மேலும் எண்ணிக்கை அதிகரிக்கும். கடந்த ஒன்றரை மாதங்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக தினமும் அதிகளவு பக்தர்கள் வருகையால் நேற்றுமுன்தினம் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். நேற்று இலவச தரிசனத்திற்காக செல்லும் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ்சில் உள்ள 31 அறைகள் நிரம்பியது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் தரிசனத்துக்காக 20 மணி நேரம் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 15 மணி நேரத்தில் 53 ஆயிரத்து 773 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலில் பக்தர்கள் அலைமோதியதால் தங்கும் விடுதிகளும் நிரம்பின. பக்தர்கள் வருகையையொட்டி கோயிலில் அன்னப்பிரசாதமும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டது.

Tags : devotees ,Tirupati Ezhumalayyan ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...