×

கொடிக்கம்ப தகராறில் தொண்டர் தற்கொலை நிவாரணம் கோரி குடும்பத்தினர் மனு

தேனி : கம்பத்தில் உள்ள நந்தகோபால் தெருவைச் சேர்ந்தவர் ராஜா மகன் சிலம்பரசன் (32). இவர் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்தபோது, அவரது வீடு அருகே கட்சிக் கொடிக்கம்பம் அமைத்துள்ளார். பின், அக்கட்சியில் இருந்து விலகி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்தார். இதையடுத்து வீடு அருகே இருந்த கொடிக்கம்பத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக் கொடியை ஏற்ற முயற்சித்தபோது, இவருக்கும், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 31ம் தேதி கொடிக்கம்பம் அருகே, சிலம்பரசன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். மிகவும் ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிலம்பரசன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்நிலையில், சிலம்பரசனின் மனைவி ராஜேஸ்வரி, குழந்தைகள் மற்றும் தயார் நாகராணி ஆகியோர் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேனி மாவட்ட பொதுச்செயலாளருடன் தேனி கலெக்டர் அலுவலகம் வந்து, நிவாரணம் கோரி கலெக்டர் முரளீதரனிடம் கோரி்க்கை மனு அளித்தனர். இது குறித்து சக்கரவர்த்தி கூறுகையில், ‘கொடிக்கம்பம் பிரச்னை சம்பந்தமாக போலீஸ் இன்ஸ்பெக்டர் முறையாக விசாரணை நடத்தாமல் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டுள்ளார். இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான சிலம்பரசன் தற்கொலை செய்தார். இவரது தற்கொலைக்கு காரணமான போலீஸ், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலை செய்த சிலம்பரசனின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். இவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என கேட்டு கோரிக்கை மனு அளித்துள்ளோம் என்றார். …

The post கொடிக்கம்ப தகராறில் தொண்டர் தற்கொலை நிவாரணம் கோரி குடும்பத்தினர் மனு appeared first on Dinakaran.

Tags : Khodikamba Dispute ,Theni ,Raja Silamparasan ,Nandakopal Street ,Pole ,
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு