×

சித்தூர் - திருவள்ளூர் 6 வழிச்சாலை தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம்

சென்னை, ஜூன் 5: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் ஆந்திரா மாநிலம் சித்தூர் முதல் தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டம் வரை ஆறுவழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. இந்தபாதை தமிழகத்தில் பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி வட்டங்களில் செல்கிறது. இதையொட்டி சம்மந்தப்பட்ட திட்டம் தொடர்பாக பொதுமக்களின் எண்ணங்களை கேட்டறியும் கூட்டம், திருவள்ளூரில் உள்ள திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையில் சிவபார்வதி கல்யாண மண்டபத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஜூலை 5ம் தேதி நடக்கிறது.

மேலும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, பெத்திக்குப்பம் கிராமத்தில் இரும்பு உருக்காலை விரிவாக்கம் தொடர்பாக அதேபகுதியில் உள்ள சிப்காட் இண்டஸ்ட்ரியல் காம்ப்ளக்ஸில் ஜூலை 9ம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது. இதேபகுதியில் சிப்காட் சார்பில் 286.065 ஹெக்டரில் மாநல்லூர் சிப்காட் தொழில் பூங்கா அமைகிறது. இதுதொடர்பாகவும் ெபாதுமக்களிடம் கருத்துக்கேட்கப்படுகிறது. இக்கூட்டம் ஜூலை 3ம் தேதி மாதர்பாக்கம், சிவன்கோவில் அருகில் உள்ள கே.வி.சி மஹாலில் நடக்கிறது.
இக்கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

Tags : Chittoor-6 ,meeting ,Tiruvallur ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...