×

கருணாநிதி பிறந்தநாள் விழா

திருவள்ளூர், ஜூன் 5:  திருவேற்காடு  நகர தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  96 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி   திருவேற்காடு பேருந்து நிலையம் அருகில்   நகர செயலாளர் என்.இ.கே. மூர்த்தி திமுக கொடியேற்றி வைத்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபு கஜேந்திரன், நகர இளைஞரணி அமைப்பாளர் எஸ். சங்கர் ஆகியோர் அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கினர். மேலும் 3,8,10,11,14,17 ஆகிய வார்டுகளில் திமுக கொடியேற்றி,  இனிப்பு வழங்கினர்.
இந்த விழாவில் நகர நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள்,  அணிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : Karunanidhi Birthday Celebration ,
× RELATED பூந்தமல்லியில் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்