×

வண்டலூர் அருகே நல்லம்பாக்கம் ஊராட்சியில் 3 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத பொது கிணறு

கூடுவாஞ்சேரி, ஜூன் 5: வண்டலூர் நல்லம்பாக்கம் ஊராட்சியில், ₹12 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் பொது கிணறு, 3 ஆண்டுகளாகியும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராததால், குடிநீரின்றி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம் ஊராட்சியில், நல்லம்பாக்கம், கண்டிகை, காந்திநகர், மல்ரோசாபுரம் உள்பட பல்வேறு பகுதிகள் உள்ளன. இங்கு, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், பொதுமக்களின் தேவைக்காக, நல்லம்பாக்கம் ஊராட்சியில் ₹12 லட்சம் மதிப்பில் குடிநீர் பொது கிணறு அமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதனால், தண்ணீரின்றி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நல்லம்பாக்கம் ஊராட்சி 9வது வார்டு வலம்புரிநகர் 1வது தெருவில் ஆயிரம் பேர் வசிக்கிறோம்.

இப்பகுதியில், கடந்த 2016- 2017ம் ஆண்டு ₹12 லட்சத்தில் புதிய குடிநீர் பொது கிணறு மற்றும் மின் மோட்டார் அறை கட்டப்பட்டது. இதில். மின் மோட்டார் மற்றும் பைப்லைன் ஆகியவை இதுவரை பொருத்தப்படவில்லை. இதனால், 3 ஆண்டுகள் ஆகியும் மேற்படி கிணற்றில் உள்ள குடிநீர், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதற்கு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், தற்போது தண்ணீருக்காக அலைந்து திரியும் மக்களுக்கு, உடனடியாக பொது கிணற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றனர்.



Tags : well ,panchayath ,Vandalur ,Nilambakkam ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்கா 9ம் தேதி திறந்திருக்கும்