×

தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு கோவிலூர் அரசு பள்ளி ஆசிரியைகளுக்கு பாராட்டு

முத்துப்பேட்டை, ஜூன் 4: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள கோவிலூர் அரசு பெரியநாயகி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். தொடர்ச்சியாக இப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி மற்றும் அதிகளவில் மார்க்குகளும் பெற்று வருகின்றனர். இந்நிலையில் சென்றாண்டு பொதுத்தேர்வில் 10ம் வகுப்பில் 96.6 சதவீதம் தேர்ச்சியும், 11ம் வகுப்பில் 98.6 சதவீதம் தேர;ச்சியும், 12ம் வகுப்பில் 99.6 சதவீதம் தேர்ச்சியும் பெற்றும் அதிகளவில் மார்க்குகள் எடுத்தும் சாதனை புரிந்தனர். இந்தநிலையில் விடுமுறை முடிந்து நேற்று பள்ளி திறக்கப்பட்டதையடுத்து கல்வி ஆர்வலர்கள், வர்த்தக கழகம், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு, தமுமுஎ, ரோட்டரி சங்கம் உட்பட பல்வேறு தன்னார்வ அமைப்பினர் பள்ளியின் தலைமையாசிரியை தாமரைச்செல்வி, உதவி தலைமையாசிரியை உமா மகேஸ்வரி, ஆசிரியைகள் பரமேஸ்வரி, மாலினி ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

Tags : school teachers ,Kovilur ,
× RELATED கோடை மழை எதிரொலி: அய்யலூர் சந்தையில் தக்காளி வரத்து குறைந்தது