×

முத்துப்பேட்டையில் கலந்தாய்வு கூட்டம் குடிநீர் தொடர்பான புகார் தெரிவிக்க தொலைபேசி எண்

முத்துப்பேட்டை, ஜூன் 4: முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் வழங்கல் மற்றும் தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்த கலந்தாய்வுக்கூட்டம் ஊராட்சிகள் துறை உதவி இயக்குனர் சந்தனம் தலைமையில் நடைப்பெற்றது. இதில் நடப்பு கோடையில் குடிநீர் வழங்கல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் குறித்தும், தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் ஊரக பகுதியில் பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்திடவும், குடிநீர் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 6772க்கு தொடர;பு கொண்டு தெரிவிக்கலாம் என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பெறப்படும் புகார்கள் உடனுக்குடன் சரி செய்யப்படும் என்றும், அனுமதியில்லாமல் எடுத்துள்ள குடிநீர் இணைப்புகள் அனைத்தையும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றி உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உரிய ஒத்துழைப்பு அளிக்கவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Tags : telephone number ,Muthupettai ,
× RELATED கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில்...