×

வரி விளம்பரம் பள்ளிகளில் மரங்கள் நட்டு பராமரிப்பதில் மாணவர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் சிஇஓ அறிவுறுத்தல்

புதுக்கோட்டை, ஜூன்4: பள்ளிகளில் மரங்கள் நட்டு பராமரிப்பதில் முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என சிஇஓ அறிவுறுத்தினார். மரம் அறக்கட்டளை சார்பில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேற்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், மரக்கன்றுகள் வளர்ப்பது என்பது ஓர் இயற்கையான நிகழ்வு தான். ஆண்டுதோறும் தலைவர்களின் பிறந்தநாள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் மரங்கள் நடப்படுவது வாடிக்கையாகி விட்டது. ஆனால் நடப்பட்ட மரங்கள் வளர்ந்து உள்ளதா என்பது தெரியவில்லை. ஆனால் புதுக்கோட்டை மரம் அறக்கட்டளையினர் நடப்பட்ட மரக்கன்றுகளை முறையாக தண்ணீர் விட்டும், இயற்கை உரம் இட்டும், கூண்டு வைத்தும் பராமரிக்க இருப்பதாகவும், அதனை பள்ளிகளில் தான் தொடங்க இருப்பதாக கூறினார்கள். இவர்கள் புதுக்கோட்டை, அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் பசுமைப்படை உள்ள பள்ளிகளில் பள்ளிக்கு 10 முதல் 20 மரக்கன்றுகள் வரை வழங்க உள்ளனர்.எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களது பள்ளிகளில் மரங்களை நட்டு பராமரிப்பதில் முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

Tags : tax advertisement schools ,
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா