×

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக விவசாய சங்கம் தொடர் முழக்க போராட்டம்

கறம்பக்குடி, ஜூன் 4: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றிய விவசாயிகள் சங்கம் சார்பில், டெல்டா பகுதிகளில் விவசாயத்தை வேரோடு அளிக்க கூடிய ஹைட்ரோ ஹார்பன் திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்ய கோரி கறம்பக்குடி ஒன்றிய விவசாய சங்க ஒன்றிய தலைவர் ராமதாஸ் தலைமையில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் குணசேகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினர் செங்கோடன், சிபிஐ மாவட்ட நிர்வாக குழு ஆரோக்கியசாமி, கறம்பக்குடி ஒன்றிய செயலாளர் சேது மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தொடர் முழக்கங்கள் எழுப்பினர்.

Tags :
× RELATED அன்னவாசல் அருகே சூதாடிய 3 பேர் கைது