வளதாடிப்பட்டி ஆண்டி அய்யனார் கோயிலில் சந்தன காப்பு விழா

இலுப்பூர், ஜூன் 4: இலுப்பூர் அருகே வளதாடிப்படியில் உள்ள ஆண்டி அய்யனார் கோயிலில் சந்தன காப்பு விழா மற்றும் பிடாரியம்மன் கோயில் திருவிழா நேற்று நடைபெற்றது. இலுப்பூர் அருகே விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கோங்கிடிப்பட்டி ஊராட்சி வளதாடிப்பட்டியில் உள்ள ஆண்டி அய்யனார் கோயில் மற்றும் பிடாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சந்தனகாப்பு விழா மற்றும் திருவிழாவையொட்டி சிறப்பு வழிபாடு ஊர் பொதுமக்களால் நடைபெற்றுவது வழக்கம. அதன்படி இக்கோயிலில் சந்தனகாப்பு மற்றும் திருவிழா வழிபாடு நேற்று நடைபெற்றது. இவ்விழா நேற்று முன்தினம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று விநாயகர் கோயிலில் இருந்து காவடிகள் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு வழிபாடு நடத்தினர். ஆண்டி அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சந்தன காப்பு நடைபெற்றது. சந்தன காப்பு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆண்டி அய்யனார் அருள்பாலித்தார். கோயிலில் பக்தர்கள் மழை வேண்டி பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் வளதாடிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

விழா ஏற்பாடுகளை மண்டகாப்படிதாரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories:

>