கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

பொன்னமராவதி, ஜூன் 4: பொன்னமராவதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொன்னமராவதி பேருந்து நிலையம் முன் கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் அழகப்பன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதே போல் பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொமுச சார்பில் சங்க கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட துணை செயலாளர் சின்னையா, பொதுக்குழுஉறுப்பினர் தென்னரசு, மாவட்ட பிரதிநிதி சிக்கந்தர், தொமுச தலைவர் அடைக்கலம், செயலாளர் முத்தையா, பொருளாளர் பிச்சை உட்பட பலர் கலந்து கொண்டனர். கறம்பக்குடி: கறம்பக்குடியில் நகர திமுக மற்றும் வடக்கு ஒன்றியம் சார்பில் சீனிக்கடை முக்கத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவிற்கு நகர அவை தலைவர் அப்துல் லத்தீப் தலைமை வகித்தார். கறம்பக்குடி திமுக நகர செயலாளர் முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கறம்பக்குடி சீனிகடைமுக்கம், பேருந்து நிலையம் , மீன்மார்கேட் ஆகிய பகுதிகளில் திமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்கும் பொங்கல் வழங்கி கொண்டாடினர்.

× RELATED கருணாநிதி பிறந்தநாள் விழா: 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள்