×

இப்தார் நோன்பு திறப்பு பெரம்பலூரில் வீசிய சூறைக்காற்றுக்கு விளையாட்டு மைதான கேலரி மேற்கூரை சரிந்து விழுந்தது

பெரம்பலூர், ஜூன் 4: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் கடும் வறட்சி ஏற்பட்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக பெரம்பலூர் மாவட்டத்தில் 100 டிகிரிக்கு குறையாமல் வெப்பம் பதிவானதால் அனல் காற்று வீசிவந்தது. அக்னி நட்சத்திரம் 29ம் தேதியோடு முடிவடைந்த நிலையிலும் தொடர்ந்து வெப்பக்காற்று வீசி வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி முதல் சூட்டை தணிக்கும் விதமாக சூறைக்காற்றோடு லேசான மழை பெய்து வருகிறது. இந்த சூறைக்காற்றுக்கு கடந்த 30ம் தேதி மலையாளப்பட்டியில் 550 பாக்கு மரங்கள் முறிந்தன. 31ம் தேதி சூறைக்காற்றுக்கு பாலையூர், வெண்பாவூர், பாளையம் பகுதிகளில் 500 வாழை மரங்கள் முறிந்தன. 1ம் தேதி சூறைக்காற்றுக்கு அரும்பாவூர்- தழுதாழை இடையே உள்ள சாலையில் 4 புளிய மரங்கள், 36 மின்கம்ங்கள் சாய்ந்தது. 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
இந்த சூறைக்காற்றுக்கு பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பார்வையாளர்கள் அமர்வதற்காக அரங்கத்தின் தெற்கேயும், வடக்கேயும் அமைக்கப்பட்ட கேலரிகளில், வடபுற கேலரியின் தகரத்தாலான 40 அடி நீளமுள்ள மேற்கூரை, இரும்பு பைப்புகளாலான தூண்களோடு பெயர்த்து கொண்டு சரிந்து விழுந்தது.

மாலை 6.30 மணியளவில் வீசிய சூறைக்காற்றுக்கு மேற்கூரை சரிந்து விழுந்தும் அன்றைக்கு அவ்வளவாக மைதானத்தில் விளையாடுவதற்காகவோ, வாக்கிங், ஜாக்கிங் செல்வதற்காகவோ யாரும் செல்லாததாலும், விளையாட்டு விடுதி மாணவிகள் விடுப்பில் இருந்ததாலும் குறிப்பிடும்படியான அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் இராம சுப்ரமணியராஜா கொடுத்த தகவலின்பேரில் கேலரியின் சரிந்த மேற்கூரையை கலெக்டர் சாந்தா பார்வையிட்டார். பின்னர் கேலரியின் மேற்கூரையை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உடனே சரி செய்ய உத்தரவிட்டதால் அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

Tags : playground gallery ,storm ,
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...