×

பெரம்பலூர், அரியலூரில் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்

பெரம்பலூர்,ஜூன் 4: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா கிருஷ்ணாபுரத்தில் திமுக தலை வர் கருணாநிதியின் 96வது பிறந்த நாளையொட்டி வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய திமுக சார்பாக ஒன்றிய தலை வர் நல்லதம்பி தலைமையில் கருணா நிதியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் பேரூராட்சியின் சார்பாக சிவன்கோவில் முன்புள்ள அண்ணா சிலைக்கு நகரச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கினார். அரியலூர்:அரியலூர் மாவட்டம் தா.பழூர் கிழக்கு ஒன்றியத்தில் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கும், அண்ணா, பெரியார்,க.சொ.கணேசன் சிலைகளுக்கும் ஒன்றிய திமுக செயலாளர் க.சொ.க. கண்ணன் மாலை அணிவித்தும், திமுக கொடியேற்றி,மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். செந்துறை அருகேயுள்ள ஆர்.எஸ்.மாத்தூரில் வடக்கு ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் திமுககொடியினை மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பெருநற்கிள்ளி கழக கொடியேற்றி வைத்து, 50 நபர்களுக்கு குடங்கள், மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில் நகர செயலாளர் கருணாநிதி தலைமையில் பிறந்தநாள் விழா நடைபெற்றது.அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அங்கு கட்சி கொடியேற்றி கேக் வெட்டியும், இனிப்புகளும் பொதுமக்களுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட துணைசெயலாளர் கணேசன், தலைமை கழக பேச்சாளர் குமார், திமுக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Tags : Karunanidhi ,birthday celebration ,Ariyalur ,Perambalur ,
× RELATED இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன்...