×

ஞாயிறுதோறும் படியுங்கள் நலத்துறை வாயிலாக மாஜி படைவீரர்களின் குழந்தைகளுக்கு உதவித் தொகை விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி, ஜூன் 4:  திருச்சி மாவட்டத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறை வாயிலாக பல்வேறு கல்விகள் பயிலும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு தொகுப்பு நிதியிலிருந்து கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இது குறித்து கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முன்னாள் படைவீரர் நலத்துறை வாயிலாக பல்வேறு கல்விகள் பயிலும் முன்னாள் படைவீரர் சிறார்களுக்கு தொகுப்பு நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2019-20ம் கல்வியாண்டிற்கு திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய முப்படைவீரர் வாரியத்தில் விண்ணப்பிக்காதவர்கள், கலை மற்றும் அறிவியல் கல்வி, தொழிற்கல்வி, பல்தொழில்நுட்பக் கல்வி மற்றும் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளில் பயிலும் முன்னாள் படைவீரர் சிறார்களின் பெற்றோர்கள் திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திலிருந்து விண்ணப்ப படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் மீள சமர்ப்பித்து கல்வி உதவித்தொகை பெற்றுச் செல்லுமாறு தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி கல்வி உதவித்தொகையாக கலை மற்றும் அறிவியல் கல்வி ரூ.10,000, தொழிற்கல்வி ரூ.10,000, பல்தொழில்நுட்பக் கல்வி ரூ.20,000, 1 முதல் 5ம் வகுப்பு வரை ரூ.500, 6 முதல் 8ம் வகுப்பு வரை ரூ.800, 9 முதல் 10-ம் வகுப்பு வரை ரூ.1,000, 11முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.1,500ம், மேலும் சுயதொழில் செய்வதை ஊக்கப்படுத்திடும் வகையில் வங்கிக்கடன் வட்டி மானியமும், போர்விதவைகளுக்கு வீடு புதுப்பித்தலுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது.  விருப்பமும், தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில்  தெரிவித்துள்ளார்.

Tags : Sun ,migrant soldiers ,
× RELATED இந்த ஆண்டிற்கான முதல் சூரிய கிரகணம்...