×

அடிப்படை வசதி கோரி பழங்குடியின மக்கள் மனு

ஊட்டி, ஜூன் 4:  நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள கோத்தர்வயல் பனியர் பழங்குடியின மக்கள் அடிப்படை வசதி செய்து தர கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.  இதுகுறித்து பனியர் பழங்குடியின மக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: குடிசை மாற்று வாரியம் மூலமாக கோத்தர் வயல் பனியர் கிராமத்தில் சுமார் 12 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இரண்டாவது கட்டமாக கட்டுமான பணிக்காக வழங்கப்படும் தொகை கடந்த 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளது.

தற்போது மழை காலம் துவங்க உள்ள நிலையில், கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கும் வகையில், நிலுவை தொகையினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டில் மேல் பகுதியை உரசிம் வகையில் மின்கம்பிகள் செல்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. எனவே இதனை சரி செய்திட வேண்டும்.   மேலும் மயானத்திற்கு செல்ல கூடிய நடைபாதை மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே நடைபாதை சீரமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : facilities ,
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...