×

அமாவாசையை முன்னிட்டு மாசாணியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

பொள்ளாச்சி, ஜன் 4: பொள்ளாச்சியை அடுத்த  ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு நேற்று சிறப்பு  பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு நேற்று  முன்தினம் மாலை முதல் வைகாசி மாத அமாவாசை வழிபாடு துவங்கியது. இதையொட்டி நேற்று காலை முதல் வெளியூர் பக்தர்கள் அதிகம் வந்திருந்தனர். மேலும் பக்தர்களுக்கு வசதியாக, நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று அதிகாலை என விடிய விடிய கோயில் நடை திறந்திருந்தது.

கோயிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், அம்மனுக்கு நேர்த்தி கடனாக பட்டுப்புடவைகளை சாத்தியும், தங்கமலர் அர்ச்சனை செய்தும் வழிபட்டனர். அதேபோல், சேத்துமடை தெய்வ காளியம்மன் கோயில், கன்னிகாபரமேஸ்வரியம்மன் கோயில், காமாட்சியம்மன் கோயில், நல்லூர் மாகாளியம்மன்கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களிலும் நேற்று அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.


Tags : Masanniyamman ,occasion ,
× RELATED திருக்கார்த்திகையை முன்னிட்டு மண்ணை...