×

டிரைவர் கைது சத்திரம் பஸ்நிலைய பகுதியில்

திருச்சி, ஜூன் 4: திருச்சி மாநகராட்சி சார்பில் சத்திரம்பஸ்நிலையம் பகுதியில் ரூ.40லட்சம் மதிப்பில் ஹெல்த் கிளினிக், நாப்கின் இயந்திரம் வசதியுடன் பெண்களுக்கான பிரத்யேக கழிப்பறை கட்டிடம் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. திருச்சி மாநகராட்சி சார்பில் மகளிருக்கான நவீன வசதிகளுடன் கூடிய முன்மாதிரி கழிப்பறை கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாநகராட்சி நிர்வாகம் சத்திரம்பஸ்நிலையத்தில் உள்ள மேல்நிலைநீர்தேக்க தொட்டி அருகே இடத்தை தேர்வு செய்து ரூ.40லட்சம் நிதிஒதுக்கி பணிகளை துவக்கியுள்ளது.

இந்த கழிப்பறையில் 6 மேற்கத்திய வடிவ கழிப்பறைகள், குழந்தைகளுக்கான பிரத்யேக கழிப்பறைகள், 24 மணிநேரமும் தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டு, சென்சார் மூலம் இயங்கும் வகையில் தானியங்கி கதவுகள், தானாக ஆன் மற்றும் ஆப்செய்து கொள்ளும் சென்சார் மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது. கைகளை கழுவுவதற்கான பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கைகளை கழுவியபிறகு கைகளை துடைப்பதற்கு தானியங்கி டிரையர் இயந்திரமும் அமைக்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தி நாப்கின் பெற்றுக்கொள்ளும் இயந்திரமும் நிறுவப்படுகிறது. அதே போல் நாப்கின்களை சுகாதார முறையில் சாம்பலாக மாற்றும் இன்சிலேட்டர் இயந்திரமும் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் இந்த வளாகத்திலேயே மகளிருக்கான ஹெல்த் கிளினிக் ஏற்படுத்தப்படுகிறது. பணம் எடுக்க வசதியாக ஏடிஎம் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் நேற்று மாலை இதன் துவக்க விழா நடந்தது. இதில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதில் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : bus shelter area ,
× RELATED டிரைவர் கைது சத்திரம் பஸ்நிலைய பகுதியில்