×

டாப்கோ வளாகம் ஆவின் வசமாகிறது

கோவை, ஜூன் 4:கோவை அரசூர் டாப்கோ வளாகம் உட்பட 3 இடத்தில் தீவன உற்பத்தி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  கோவை மாவட்டத்தில் அரசூரில் தமிழ்நாடு கோழி வளர்ச்சி வாரியத்தின் (டாப்கோ) குஞ்சு பொரிப்பகம் மற்றும் முட்டை கிடங்கு இருந்தது. இங்ேக முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோழி வளர்க்கப்பட்டு, குஞ்சு மற்றும் முட்டை உற்பத்தியும் நடந்தது. ேகாவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு இங்கேயிருந்து முட்டை சப்ளையானது. 30 ஆண்டிற்கு முன் துவக்கப்பட்ட இந்த வாரியம், கடந்த 1999ம் ஆண்டில் மூடப்பட்டது. அரசு பள்ளிகள் மற்றும் சத்துணவு மையங்களுக்கு ஒப்பந்த முறையில் தனியாரிடம் இருந்து முட்டை கொள்முதல் செய்யும் பணி துவங்கியது. இதை தொடர்ந்து தனி வாரியமாக இருந்த டாப்கோ முடங்கியது. 20 ஆண்டாக எந்த பயன்பாடும் இல்லாமல் டாப்கோ வளாகம் வீணாக கிடக்கிறது.  டாப்கோ சொத்துக்கள், கால்நடை பராமரிப்பு துறை வசம் இணைக்கப்பட்டது. ஆனாலும் இந்த வளாகம் எந்த திட்டத்திற்கும் பயன்படுத்தப்படவில்லை. எந்த பாதுகாப்பும் இல்லாத வளாகத்தை சிலர் ஆக்கிரமித்திருந்தனர். சிலர் காலியாக கிடந்த கட்டடத்தில் அத்துமீறி வசித்து வந்தனர். சமீபத்தில் இங்கே ஆய்வு நடத்திய கால்நடை பராமரிப்பு துறை மற்றும் ஆவின் நிர்வாகத்தினர் தீவன தோட்டம் அமைக்க முடிவு செய்தது. டாப்கோ வளாகத்தில் 11.06 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கே தண்ணீர் வசதி கிடையாது. போர்வெல் அமைத்து நீர் எடுத்து சொட்டு நீர் பாசனத்தில் தீவன தோட்டம் அமைத்தால் அரசூர், நீலம்பூர், கணியூர் உள்ளிட்ட பகுதி விவசாயிகளுக்கு கால்நடை தீவனம் வழங்க முடியும்.


Tags : Tapco Campus ,Aavin ,
× RELATED மாதவரம் ஆவின் பால் பண்ணையில் மிஷின்...