×

பேரூராட்சி செயல் அலுவலர் மீது துப்புரவு தொழிலாளர்கள் புகார்

ஈரோடு, ஜூன் 4:  ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பெருந்துறை பேரூராட்சியில் 50 தொழிலாளர்கள் பொது சுகாதாரப்பணியில் தினக்கூலி அடிப்படையில் 5 ஆண்டு முதல் 12 ஆண்டுகள் வரை பணியாற்றி வருகின்றனர். கழிவு நீர் அகற்றல், குடிநீர் வழங்கல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இது குறித்து உதவி தொழிலாளர் ஆணையரிடம் முறையிட்டுள்ளனர். இதை மனதில் வைத்துக்கொண்டு பேரூராட்சி செயல் அலுவலர் தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தங்களது உரிமைகளுக்காக குரல் கொடுத்த தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Cleaners ,Panchayat Executive Officer ,
× RELATED துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள்: அரசாணை வெளியீடு