×

சேலம் சிந்தி இந்து பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு வரவேற்பு

சேலம், ஜூன் 4: சேலம் நாராயணநகர் பகுதியில் அரசு உதவி பெறும் சிந்தி இந்து துவக்கப்பள்ளி செயல்படுகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இப்பள்ளியில் ஐசிடி தொழில்நுட்பத்துடன் புரொஜெக்டர், டிவி, கணினி வழி கற்றல் முறையை மிக சிறப்பாக ெசயல்படுத்தி வருகின்றனர். நடப்பு கல்வியாண்டில் முதல் வகுப்பு ஆங்கில வழிக்கற்றலுக்கு விண்ணப்பிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  
சிந்தி இந்து பள்ளியில் நேற்று (3ம்தேதி)  முதலாம் வகுப்பில் சேரும் மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதன்படி புதிதாக சேர்ந்த 138 மாணவ, மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் லதா ஆகியோர், கிரீடம் அணிவித்தும், மலர் கொத்தும் உற்சாக வரவேற்பளித்தனர்.

Tags : Salem Sindhi ,class ,school ,
× RELATED பல்லடம் அரசு பள்ளிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் விநியோகம்