×

ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகளில் 13 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு

ஆத்துர், ஜூன் 4: ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகளில் உள்ள வார்டுகளில் தாழ்த்தப்பட்டோர், பெண்களுக்கான 13 வார்டுகள் வரையறுக்கப்பட்டு, அதன் விபரம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு: ஆத்தூர் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் ஆதிதிராவிடத் பொது வார்டுகளாக (3 வார்டுகள்) 3,26,31 ஆதிதிராவிடர் (பெண்கள்) ( நான்கு வார்டுகள்) 4,29,30,33 பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகள் (13 வார்டுகள்) 6,10,13,14,15,18,19,20,21, 22,24,28,32 மீதமுள்ள 13 வார்டுகள் பொது வார்டுகளாகும். நரசிங்கபுரம் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில் ஆதிதிராவிடர் (பொது 2 வார்டுகள்) 9,10 ஆதிதிராவிடர்கள் (பெண்கள்) (2வார்டுகள்) 15,17 பெண்கள் (7 வார்டுகள்) 5,6,7,8,11,12,13 மீதமுள்ள 7 வார்டுகள் பொது வார்டுகளாக அறிவித்து வெளியிடப்பட்டுள்ளது.

Tags : women ,Attur ,municipalities ,Narsingapuram ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...