திருச்செங்கோடு அருகே இந்திய கம்யூனிஸ்ட் ஆலோசனை கூட்டம்

திருச்செங்கோடு, ஜூன் 4: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெரியமணலி கிளை சார்பில், இலவச வீட்டு மனைக்கான இடம் வழங்க வேண்டி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி விண்ணப்பித்தவர்களின் ஆலோசனை மற்றும் பேரவை கூட்டம் நடந்தது.  கூட்டத்திற்கு கிளைச் செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணிவேல்  மற்றும் மாவட்ட செயலாளர் குழந்தான் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், கிருஷ்ணசாமி, வழக்கறிஞர் முத்துசாமி, செல்வராஜ், மணிமாறன், செங்கோட்டையன் ஆகியோர்  வாழ்த்திப் பேசினர். மாரிமுத்து, அன்புமணி ஆகியோர் நன்றி கூறினர். கூட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.       

Tags : Indian ,Communist Advisory Meeting ,Tiruchengode ,
× RELATED ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில்...