பரமத்திவேலூரில் பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கம் மீண்டும் அதிகரிப்பு

பரமத்திவேலூர், ஜூன் 4: பரமத்திவேலூரில் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் தடை அமலில் உள்ளது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடுக்க ஆர்வம் காட்டிய அதிகாரிகள், வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், டீ கடைகள், உணவு விடுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பாலிதீன் பைகளை முதல் செய்து அப்புறப்படுத்தி வந்தனர். இதனால் பிளாஸ்டிக் பயன்பாடு வெகுவாக குறைந்தது.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக பரமத்திவேலூர் பகுதியில், மீண்டும் பிளாஸ்டிக் பாலித்தீன் பைகளின் புழக்கம் அதிகரித்துள்ளது.  தற்போது இறைச்சிக்கடை, மளிகைக் கடை முதல் உணவு விடுதிகள் வரை அனைத்து இடங்களிலும் பாலிதீன் பைகள் தாராளமாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. எனவே, பிளாஸ்டிக் பாலித்தீன் பைகள் புழக்கத்தை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: